சென்னை, மார்ச் 17: சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.584 குறைந்து ரூ.30,960 ஆக விற்பனையாகிறது. இதன் மூலம் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.31 ஆயிரத்துக்கு கீழ் சென்றுள்ளது.

கடந்த 10-ம் தேதி ஆபரண தங்கம் சவரனுக்கு 33,712 என்ற உச்சத்தில் இருந்த நிலையில் அதன் பின்னர் தொடர்ந்து ஒரு வாரமாக சரிவை சந்தித்துள்ளது. 11-ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 33,312 ஆக இருந்தது. 12-ம் தேதி ஆபரண தங்கம் சவரனுக்கு 256 ரூபாய் மேலும் குறைந்து ரூ. 33 ஆயிரத்து 256-க்கும், ஒரு கிராம் ரூ. 4,157-க்கும் விற்பனை ஆனது. நேற்று 13-ம் தேதி சவரனுக்கு ரூ.1096 குறைந்து, ரூ.32 ஆயிரத்து 160க்கு விற்பனை ஆனது.

கடந்த 15-ம் தேதி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 31,472 என விற்பனையானது. நேற்று 16-ம் தேதி சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து ரூ.31,544 ஆக விற்பனையானது.
இந்நிலையில் இன்று காலை வர்த்தம் தொடங்கிய உடன் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.584 குறைந்தது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 3870 ரூபாய்க்கும், ஒரு சவரன் ரூ.30,960 ஆகவும் விற்பனையாகிறது.

இதே போல் ஒரு கிராம் வெள்ளி நேற்றைய விலையான ரூ.40.80-ல் இருந்து 180 காசுகள் குறைந்து ரூ.39 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி கட்டியின் விலை 40,800 ரூபாயில் இருந்து 39 ஆயிரமாகவும் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.