‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை வாங்கிய கதிரேசன்

சினிமா

நடிகர் ப்ரித்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளிவந்த ‘அய்யப்பனும் கோஷியும்’ மலையாள படம் விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரின் பாராட்டு பெற்று வெற்றி அடைந்துள்ளது. வசூலிலும் விநியோகஸ்தர்களை பெரிய அளவில் திருப்திபடுத்தியிருக்கிறது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் கைப்பற்றியுள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் கதிரேசன் கூறியதாவது…
படத்தின் திரைக்கதை, கதை சொல்லப்பட்டிருக்கும் பின்னணி களம், அழகாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் விதம், அனைத்தையும் தாண்டி கதையை தாங்கும், ஒவ்வொரு கதாப்பாத்திரங்களின் பிரமிப்பான நடிப்பு, இவையனைத்தும் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுவதாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றியது மகிழ்ச்சி. தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு, மலையாளப்பதிப்பின் மதிப்பு கெட்டுவிடாமல், ரீமேக் செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

தமிழின் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் இப்படத்தின் ரீமேக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மிக விரைவில் தமிழ் பதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.