சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகர் மனோஜ் பாரதிராஜா நடிக்கிறார்.

அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, சுரேஷ் காமாட்சி, மனோஜ் ஆகியோர் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்த படம் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா மோதும் காட்சி ஒன்று ஐதராபாத்தில் வித்யாசமாக படமாக்கப்பட்டது.