இணைய ரேடியோவில் ஜியோ சாவன் நிறுவனத்தின் ஆர்ஜே பாலாஜி தொகுத்து வழங்கும் மைண்ட் வாய்ஸ் நிகழச்சியில் ‘தெறித்து ஓடு’ எனும் தலைப்பில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் பற்றி கலப்பாக பேசியிருக்கிறார். இந்த கொரோனா வைரஸை பற்றியே எல்லோரும் பேசி வரும் நிலையில் அச்சமும் சூழ்ந்து வர, அதனை விட பெரும் பகடியாய் வெறொன்று மாறியுள்ளது.

எல் கே ஜி படத்தில் ஒரு காட்சியில் ‘ஓடு வைரஸே’ என வைரஸ்க்கு எதிராக போராடும் காட்சி வரும். நாஸ்டடார்மஸ் முன்கணிப்பு போல் அது தற்போது உண்மையாகியுள்ளது. சில இளைஞர்கள் பட்டாளம் ‘ஓடு கொரோனா ஓடு’ என ஓங்கி சத்தம் போட்டு போராடி வரும் காமெடி நிகழ்ந்துள்ளது.

இதனை அப்படியே தன் நிகழ்ச்சியில் இணைத்து கலாய்த்துள்ளார் ஆர்ஜே பாலாஜி. இதில் உச்சபட்ச கலாய்ப்பாக இந்த கூட்டத்தில் ஒருவர் கடுமையாக தும்மினால் என்னவாகும் என்று கேட்டது பெரும் நகைச்சுவையாக அமைந்தது.