மும்பை, மார்ச் 17:  கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்த்தால் போதுமானது என டிவிட்டரின் சி.இ.ஓ. ஜாக் டோர்சேவின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் கூகுள் நிறுவனமும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் படி அறிவுறுத்தி இருந்தது.

இந்த சூழலில், தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அலுவலகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, ஊழியர்கள் தங்கள்தங்கள் வீட்டில் இருந்த படியே வேலை பார்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மும்பை கிரிக்கெட் சங்கமும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 21-ம் தேதி வரை மூடப்படுவதாக தெரிவித்துள்ளது.