மாட்ரிட், மார்ச் 17:  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஸ்பெயினில் 21 வயதே ஆன இளம் கால்பந்து வீரர் உயிரிழந்துள்ளது, அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் 155 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 7,000 தாண்டியுள்ளதாம். தனிமனித சுகாதாரம் கருதி, பொதுமக்கள் யாரும் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த நாடு மற்றும் மாநில அரசுகள் இம்மாத இறுதிவரை விடுமுறை அளித்தும் உத்தரவிட்டுள்ள நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கையே முடங்கியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஸ்பெயின் கிளப் கால்பந்து பயிற்சியாளரும் வீரருமான, பிரான்சிஸ்கோ கார்சியா (வயது 21) கொரோனா உயிரிழந்துள்ளார். இவர், ஏற்கனவே தீவிர புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.