சென்னை, மார்ச் 18: கொரோனா தாக்கத்தால் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு ஏற்பட்டு நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை ரூ.1.90ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக நாமக்கல்லில் 15 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், தமிழகத்தில் சத்துணவு, வெளி மாநிலங்களுக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டதால் முட்டைகள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பீதியால் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முட்டை விலை சரிந்துள்ளது. நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 70 காசுகள் சரிந்து ரூ.1.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கடைகளில் ஒரு முட்டை ரூ.3.50 முதல் விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை குறைந்தாலும் ஓட்டல்களில் ஆம்லெட் விலை குறைக்கப்படுவதில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றன.