நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த அஜ்மல்

சினிமா

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில் மிக முக்கியமாக கதாப்பாத்திரத்தில் அஜ்மல் நடிக்கிறார். மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் பெரும் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார்.

இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது. கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

ரௌடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்படத்தை தயாரிக்கிறார். இயக்குநர் மிலிந்த் ராவ் எழுதி, இயக்குகிறார். கிரிஷ் இசையமைக்க, ஆர் டி ராஜாசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு மேற்கொள்ள, கமலநாதன் கலையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் மிலிந்த்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.