பிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடைபெறுவதாக இருந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக விழா வேண்டாம் என்று பலர் அறிவுறுத்தியதால் பாடல் வெளியீட்டு விழாவை படக்குழுவினர் ரத்து செய்துள்ளனர்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தான் இப்படத்தை தயாரித்துள்ளது. படம் வரும் 27-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் அன்றைய தினத்தில் பொன்மகள் வந்தாள் படம் வெளியாவது சந்தேகமே.