பொன் நகை வேண்டாம் புன்னகையே போதும்: ராஷி கண்ணா

சினிமா

தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா, தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களை அடுத்து தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கிராந்தி மாதேவ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

மேலும் கே எஸ் ரவீந்திரன் இயக்கும் ‘வெங்கிமாமா’ என்ற தெலுங்கு படத்தில் வெங்கடேஷ், நாகசைதன்யா ஆகியோருடன் நடித்து வருகிறார். கார்த்தி ஜி கிருஷ் இயக்க உள்ள ‘சைத்தான் கே பட்சா’ படத்திலும், மிருதி இயக்கத்தில் சாய் தரம்தெஜ் உடன் ஒருபடத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். இது தவிர தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை-3 படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு நகை அணிவதில் ஆர்வமில்லை என்றும், தோழிகள் வற்புறுத்தினால் நகைகள் அணிந்து கொள்வதாகவும் கூறினார்.