புதுடெல்லி, மார்ச் 18:நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை மறுநாள் தூக்குத்தண்டனை நிறைவேற்றுவது தொடர்பாக டெல்லி திஹார் சிறையில் இன்று ஒத்திகை நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.

நிர்பயா பலாத்காரம் குற்றவாளிகள் 4 பேரை நாளை மறுநாள் 20-ம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், குற்றவாளிகளை தூக்கில் போடும் ஒத்திகை டெல்லி திகார் சிறையில் நடைபெற்றது. அப்போது தூக்கு கயிறு குற்றவாளிகளின் எடையை தாங்குமா? வலுவாக உள்ளதா? நகரும் பலகைகள் சரியாக செயல்படுகிறதா? போன்ற செயல்களை செய்து பார்த்தனர். இந்த ஒத்திகையின் போது, சிறைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.