அம்பத்தூர், மார்ச் 18:

ஆவடி ஜெயா கல்லூரியில் தேசிய கருத்தாய்வு நிகழ்ச்சி நடந்த்து.

ஆவடி அருகே அமைந்துள்ள ஜெயா பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் தேசிய அளவிலான கருத்தாய்வு நிகழ்ச்சி ஜெயா கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் கனகராஜ் தலைமையில் கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி துறைத் தலைவர் சீதாதேவி வரவேற்றார்.

கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாமிதுரை முன்னிலை வகித்தார். இந்த கருத்தாய்வரங்கில் காகித விளக்க காட்சி, திட்ட கண் காட்சி, நிரல் குறியீடு, பிழை திருத்தம் போன்றவை நடை பெற்றது.

பின்னர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக எச் சி எல் கம்பெனியின் மேலாளர் அருள்நம்பி கலந்து கொண்டு கருத்தாய்வரங்கில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் மாணவர்கள் உட்பட ஏராள மானோர்கள் கலந்து கொண்டனர்.