டோக்கியோ, மார்ச் 18:  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை கவனித்து வந்த முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டியின் துணைத்தலைவர் கோஜோ தஷிமா கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

அமெரிக்கா சென்ற அவர் அங்கிருந்து 8-ம் தேதி தாயகம் திரும்பினார். அப்போதிலிருந்தே கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறதாம்.

இதனிடையே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விடுத்துள்ள அறிக்கையில், ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் இப்போது எந்தவித கடினமான முடிவும் (தள்ளி வைப்பு அல்லது ரத்து) எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.