லிஸ்பன், மார்ச் 18:  கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்காக, தனது ஓட்டலை மருத்துவமனையாக மாற்றுவதாக போர்ச்சுகல்லை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா, உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. போர்ச்சுகலில் 245 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. வரும் ஏப்ரல் 9-ம் தேதிவரை அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதனிடையே, போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டனும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, லிஸ்பனில் உள்ள தனது ஓட்டலை, தற்காலிக மருத்துவமனையாக மாற்றி, அதில் கொரோனா நோய்தொற்று உள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்துள்ளராம்.

இது குறித்து ரொனால்டோ வெளிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒரு கால்பந்து வீரராக இல்லாமல், மகனாக, அப்பாவாக, ஒரு மனிதத்தன்மை கொண்டவராக, கடினமான சூழ்நிலையில் இதை எழுதுகிறேன். மற்ற எந்த விஷயத்தை விடவும் மனித உயிர்களை காப்பது மிக முக்கியம். நெருக்கமானவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் எனது எண்ணங்களை தெரிவிக்க விரும்புகிறேன். எனது சக யுவண்டஸ் வீரர் டேனியலி ருகானி போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அந்த வைரஸை எதிர்த்து போராடுபவருக்கும், மருத்துவ துறையினருக்கும் ஆதரவு தருகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.