சென்னை, மார்ச் 18:

கோழி இறைச்சி மற்றும் முட்டையால் கொரோனா வைரஸ் பரவாது என்று கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா அச்சத்தினால் கோழி விற்பனை, முட்டை விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. முட்டை விலை ரூ1.50ம், கறிகோழி விலை கிலோ ரூ 15 என கடுமையாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கோழி பண்ணை தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வதாரம் கேள்வி குறியாகியுள்ளது. ஆகவே கோழி பண்ணை யாளர்களையும், லட்ச கணக்கான தொழிலாளர்களையும் அரசு காக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் நாமக்கல் தொகுதி உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கோழி இறைச்சியில் இருந்து கொரோனா வைரஸ் பரவுவதில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். கோழிக்கறி மூலம் கொரோனா பரவாது என சுகாதாரத்துறை ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

ஆகவே வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் கோழி விற்பனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பண்ணை உரிமையாளர்கள் என்னை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இவை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆகவே முதல்வரிடம்