சமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பான ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் இரட்டை வேடத்தில் அனைவரையும் கவரும் நடிப்பை தந்திருந்தவர் நடிகர் நந்தா. தற்போது அதர்வா முரளி நடிப்பில் உருவாகும் போலீஸ் திரில்லர் படத்தில் வில்லன் பாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

இது குறித்து இயக்குநர் ரவீந்தர மாதவ் கூறியதாவது.
இப்படம் துவங்கப்பட்டபோதே படத்தில் இருக்கும் கனாமான வில்லன் கதாப்பாத்திரம் குறித்து கூறியிருந்தேன். திரையில் அந்த கதாப்பாத்திரத்தினை உயிர்பிக்க திறமை வாய்ந்த ஒருவர் தேவைப்பட்டார். இறுதியாக அசாத்திய திறமை கொண்ட நடிகர் நந்தா எங்களுடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார் என்றார்.

இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க அதர்வா முரளி ஜோடியாக, லாவண்யா திரிபாதி நடிக்கிறார். இப்படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கலை மேற்கொள்கிறார்.