தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஆண்ட்ரியாவுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. அவரது கேரியரில் ஆயிரத்தில் ஒருவன், துப்பறிவாளன், தரமணி, அரண்மனை ஆகிய படங்கள் மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் ‘கா’ படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். இந்த படத்தை நாஞ்சில் இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த படங்களை வெளியிட்டுள்ளார்.