குறும்படங்கள் மூலம் இயக்குநராகும் இளைஞர்கள்

சென்னை

குறும்பட முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய படைப்பாளிகளை வரவேற்கும் விதத்திலும் ‘சீகர் தேசிய குறும்பட விழா 2020’ ஏற்பாடு செய்யப்பட்டு இந்த விழா அண்மையில் நடைபெற்றது. தேசிய அளவில் நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி போன்ற மொழிகளிலிருந்து ஏராளமான குறும்படங்கள் போட்டியில் கலந்து கொண்டன.

‘ நண்டூறுது’ என்கிற தமிழ்க் குறும் படம் முதல் பரிசு பெற்றது. ‘டிக்கெட்’ என்கிற இந்திக் குறும்படம் இரண்டாம் பரிசைப் பெற்றது . ‘டெத் ஆஃபர்ஸ் லைஃப்’ என்கிற மலையாளக் குறும்படம் மூன்றாம் பரிசைப் பெற்றது. ‘காமப்பாழி ‘ என்கிற தமிழ்க் குறும்படம் ஜூரியின் சிறப்பு விருது பெற்றது.

விழாவில் சீகர் நிறுவனத்தின் தலைவர் ராஜ்குமார், இயக்குநர் நடிகர் பாண்டியராஜன், நிர்வாக இயக்குநர் கமல குமாரி ராஜ்குமார், இயக்குநர் செல்வா, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் பேராசிரியர் கார்த்திகேயன், தயாரிப்பாளர் டில்லி பாபு போன்ற பலரும் கலந்து கொண்டனர்.