தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு கருதி, தமிழ் சினிமாவில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து ஒரு சிறந்த அணியை உருவாக்கி, வருகின்ற தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் (2020-22) போட்டியிடுகிறது.

இந்த அணியின் தலைவராக டி. சிவா, பொருளாளராக கே.முரளிதரன், செயலாளராக பி.எல்.தேனப்பன் மற்றும் ஜே.எஸ்.கே. சதிஷ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் துணைத்தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், ஜி.தனஞ்செயன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 15-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்களாக போட்டியிடுகின்றனர்.