சென்னை, மார்ச் 20:

தமிழகத்தில் இதுவரை 2 லட்சம் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் தெரிவித்தார்.
இத்தாலி போன்ற நாடுகளில் தடுப்பு நடவடிக்கை இல்லாததால் தான் அங்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டது என்றும் தமிழகத்தில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

எனது தலைமையில் நான்கு முறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிலைமைக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரெண்டு லட்சம் பயணிகள் இதுவரை சோதிக்கப்பட்டு 32 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், தீவிர சிகிச்சைகள் உள்ளனர். போதுமான நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக மக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போதுமான அமைக்கப்பட்டு, போதிய மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் வெளியிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக பின்பற்றி வருகிறது .

அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மருத்துவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு சிரமங்களுக்கு இடையே பணியாற்றும் அரசு அதிகாரிகள், தூய்மைப்பணியாளர், மருத்துவ துறையினதுக்கு நன்றி சட்டமன்றத்தில் கூடியிருந்தால் நோய் ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. சட்டமன்றம் நடந்தால்தான் நாட்டின் நிலமையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். இங்குதான் மக்கள் பிரச்சினைகளை பேச முடியும். அதற்காகத்தான் மக்கள் நம்மளை தேர்ந்தெடுத்து அனுப்பி உள்ளார்கள். யாரும் அச்சப்பட வேண்டாம்.

தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணியாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, இத்தாலியில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காததால் தான் நோய் பரவியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருபவர்களை சோதனை செய்து தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் தடுப்பு நடவடிக்கை எடுக்காததால் தான் நோய் பரவியது.

ஆனால் இங்கு அப்படி அல்ல. தமிழ்நாட்டில் இருந்து ஒருவருக்கும் நோய் பாதிப்பு ஏற்படவில்லை. சட்டமன்றம் நடந்துகொண்டு இருந்தால்தான் மக்கள் அச்ச உணர்வை போக்க முடியும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு தான் நோய் பாதிப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.