தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்தாலும், பாலிவுட்டில் பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். #Tamannah
தமன்னா கவர்ச்சியாக நடிக்க தயங்காதவர். பாகுபலி படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடிக்க மாட்டார். அது முத்தக்காட்சி.

உதட்டு முத்தக்காட்சிகளில் நடிப்பதை மட்டும் தவிர்த்து விடுகிறார். அப்படியொரு காட்சியில் நடிக்கும் நிலை ஏற்பட்டால் யாருடன் நடிப்பீர்கள்? என்று கேட்டதற்கு இந்தி நடிகர் ஹிருத்திக் ரோ‌ஷன் உடன் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று தெரிவித்துள்ளார். எந்த நடிகருடன் டேட்டிங் செய்ய விருப்பம் என்று தமன்னாவிடம் கேட்டபோது?’

இந்தி நடிகர் விக்கி கவு‌ஷல் உடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். விக்கி கவு‌ஷல் இந்தி பட இயக்குனர் ஷாம் கவுசலின் மகன். ராஸி, லஸ்ட் ஸ்டோரிஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் தமன்னாவுக்கு இந்தி பட உலகில் வலம் வரவேண்டும் என்று ஆசை இருக்கிறது.

தற்போது காமோஷி என்ற இந்தி படத்தில் அவர் நடித்துள்ளார். அப்படம் வெளிவர தாமதமாகிறது. பாலிவுட் வட்டார இயக்குனர்கள், நடிகர்களின் கவனத்தை கவரவே அடிக்கடி இந்தி நடிகர்கள் பற்றி தமன்னா பேசி வருவதாக கூறப்படுகிறது.