எனது சினிமா பயணத்திற்கு அது ஒரு தடையாக இருக்காது: அஞ்சலி

சினிமா

தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அஞ்சலி, எனது சினிமா பயணத்திற்கு அது ஒரு தடையாக இருக்காது என்று கூறியிருக்கிறார். #Anjali

அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் என நடிக்க தெரிந்த நடிகை என்று பெயர் எடுத்தவர் அஞ்சலி. அஞ்சலியை சுற்றி சமீபகாலமாக நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. நடிகர் ஜெய்யை அவர் காதலிப்பதாக செய்திகள் வந்தன. இருவருமே மறுக்கவில்லை.
தற்போது அந்த கிசுகிசுக்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில் ‘நான் யாரையும் காதலிக்கவில்லை. சினிமாவைத்தான் நான் காதலிக்கிறேன். நடிகைகள் காதலிப்பது, திருமணம் செய்துகொள்வது எல்லாம் சகஜம் தான். என்னை பொறுத்த வரை திருமணம் செய்து கொண்ட பிறகும், நான் நடிப்பை தொடருவேன். எனது சினிமா பயணத்திற்கு திருமணம் ஒரு தடையாக இருக்காது”, என அவர் கூறினார்.